கவலை கொள்ளாதிருங்கள் (2)
உயிர் வாழ எதை உண்போம்
உடல் எதை உடுப்போம் என்று
1.
பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதில்லை, அறுப்பதில்லை
பரம பிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே(மகளே) உன்னை – கவலை
2.
கவலைப் படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புது பெலன் பெறவும் கூடுமா – கவலை
3.
நாளைய தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் நீ
இன்றைக்கு நன்றி சொல்லு – கவலை
4.
தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது நம்
தேவைகளை சந்திப்பார் – கவலை
5.
காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை, நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார். – கவலை